மேலும் செய்திகள்
குறிச்சியில் அரவான் திருவிழா
1 minutes ago
மருதமலை கோவிலுக்கு லிப்ட் புத்தாண்டில் இயக்கப்படுமா?
2 minutes ago
87 வயதில் என்னை அலைக்கழிக்கலாமா?
4 minutes ago
முட்டை விலை உயர்வு
5 minutes ago
கோவை: கோவை நகரில் பாப்பநாயக்கன்பாளையம் முக்கியமான பகுதி. காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், ஆவராம்பாளையம் ரோடு, பாலசுந்தரம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பாப்பநாயக்கன் பாளையத்தை கடந்து செல்கின்றன. காய்கடை மைதானம் என்ற இடத்தில் திருப்பம் வருகிறது. அவ்விடத்தில் லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், எதிரில் உள்ள ரோட்டுக்குச் செல்லும் வகையில் மையத்தடுப்பு கற்கள் வைக்காமல் இடைவெளி விடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில்ஸ் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அங்கிருந்து வரும் வாகனங்களும் திருப்பத்தில் திரும்பும் போது விபத்தை சந்திக்கின்றன. அப்பகுதி மிகவும் குறுகலாக இருக்கிறது; ரோடும் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கிறது. அப்பகுதியை வாகன ஓட்டிகள் தங்கள் இஷ்டத்துக்கு கடந்து செல்கின்றனர். அருகாமையில் ஆட்டோ ஸ்டாண்ட், கோயில் இருக்கிறது. கோயில் அருகிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால் ரோடு குறுகி காணப்படுகிறது. திருப்பத்தை கடந்து செல்வதற்காக வாகனங்கள் நிற்கும்போது, பின்னால் வரும் இதர வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. தேவையின்றி போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது. இப்பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, இடைவெளி விட்டுள்ள இடத்தில் மையத்தடுப்பு கற்கள் வைக்க வேண்டும். சிக்னல் வரை வாகனங்கள் சென்று திரும்பி வரும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். கோயிலை ஒட்டி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இடங்களை மீட்டெடுக்க வேண்டும். இதேபோல், சற்றுத்துாரம் தள்ளிச் சென்றால், மதுக்கடைக்கு முன்பும் மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்டுள்ளன. மதுக்கடைக்கு மதுபானங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் திரும்பிச் செல்வதற்கு ஏதுவாக, மையத்தடுப்பு கற்கள் அகற்றப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இவ்விடமும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், மையத்தடுப்பு கற்கள் வைத்து அடைக்க வேண்டும். தேவையின்றி ரோட்டின் குறுக்கே வாகனங்கள் கடந்து செல்வதை போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து தடுத்து நிறுத்த வேண்டும்.
1 minutes ago
2 minutes ago
4 minutes ago
5 minutes ago