உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு

 காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு

உக்கடம்: உக்கடம் கோட்டைமேடு சமராவ் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 47. கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோயிலில் பணியில் நாகேந்திரன் இருந்த போது அவருக்கு தெரிந்த கண்ணன் என்பவர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றார். பணி முடிந்து வீட்டுக்கு சென்று பார்த்த போது, மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கதவு, ஜன்னல் கதவில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியது தெரிந்தது. இதில் கதவுகள் சேதமடைந்திருந்தன. புகாரையடுத்து, உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை