உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேவாட் கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,

மேவாட் கொள்ளையர் மீதான அதிரடி மிகச்சிறந்த பாடம்; முன்னாள் டி.ஜி.பி.,

கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு, கன்டெய்னரில் தப்ப முயன்ற, 'மேவாட்' கொள்ளையரை, நாமக்கல்லில் தமிழக போலீசார் என்கவுன்டர் செய்து, வளைத்துப் பிடித்தது, தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் கூறியதாவது:

'மேவாட்' கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் என்கவுன்டர் செய்து பிடித்தது, கடந்த, 35 ஆண்டு கால தமிழக போலீஸ் வரலாற்றில் சிறப்பான சம்பவம்.நாமக்கல் போலீசார் துரிதமாக செயல்பட்டது தான் வெற்றிக்குக் காரணம். திருச்சூர் போலீசார், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தருகின்றனர். உடனடியாக, எஸ்.பி., சரியான போலீஸ் 'டீமை' அனுப்பி வைக்கிறார். இதுபோன்ற துரிதமான, 'ஆக் ஷன்' அரிதான ஒன்று. தமிழக போலீசார் தாங்கள், 'நம்பர் ஒன்' என்பதை நிரூபித்துள்ளனர்.போலீசின் இந்த நடவடிக்கையில் அபாயம் அதிகம். முன்பு, 'பவாரியா' கொள்ளையர்களைப் பிடித்து விசாரிக்கையில், தமிழக போலீசாரிடம் துப்பாக்கி இருக்காது என்பதால், துணிச்சலாக திருடுவதாகவும், தடுத்தால் தாக்குதல் நடத்தி தப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.தற்போது, தகவல் கிடைத்ததும் துரிதமாக முடிவெடுத்து, திறமையான குழுவை எஸ்.பி., அனுப்பியுள்ளார். இன்ஸ்பெக்டரிடம் துப்பாக்கி இருந்ததும், அதை முறையாக பிரயோகிக்க தெரிந்திருந்ததும் முக்கியம். துப்பாக்கி இல்லாவிட்டாலோ, அதை சரியாக பயன்படுத்தியிருக்கா விட்டாலோ தோல்வி நிச்சயம்.உளவியல் ரீதியாக சரியாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம். இந்த போலீஸ் குழுவுக்கு, ஜனாதிபதியின் வீரதீரச் செயல்களுக்கான விருது கிடைக்கும். இந்த ஒரு என்கவுன்டரால், பிற மாநில கொள்ளையர் தமிழகத்துக்கு வர யோசிப்பர். 2005-06 காலகட்டங்களில், பவாரியா கொள்ளையர்களைப் பிடித்த பின், அவர்கள் இங்கு வருவதில்லை.

குற்றங்களின் தலைநகர்

ஹரியானா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில், ஏ.டி.எம்., கொள்ளை சர்வ சாதாரணம். ஏ.டி.எம்., இயந்திரத்தையே வெட்டி எடுத்துச் சென்று விடுவர்.ஹரியானா மாநிலம், பல்வால் மாவட்டம் குற்றச் சம்பவங்களின் மையப்பகுதி. பவாரியா கொள்ளையர்களும் இங்கிருந்து தான் செயல்பட்டு வந்தனர். மேவாட் கொள்ளையர்களும் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். முன்பு, சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள், மக்கள் சற்று விழிப்புணர்வு அடைந்ததால், ஏ.டி.எம்., கொள்ளையில் இறங்கியுள்ளனர்.ராஜஸ்தான், உ.பி., ஹரியானா, பஞ்சாப், டில்லி என மாறி மாறிச் சென்று கொள்ளையடித்து விட்டு வந்துவிடுவர். போலீசாரும் தங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேடுவர் என்பதால், எளிதில் சிக்காமல் இருந்து வந்தனர். ஆனால், தமிழகத்தில் அது நடக்கவில்லை. இனி, மேவாட் கொள்ளையர்கள் மட்டுமல்ல வடமாநிலத்தில் இருந்து எந்த கொள்ளைக் கும்பலும் தமிழகத்துக்கு வரமாட்டார்கள். அதேநேரம், கேரள போலீசார், ஜ.ஜி., அளவில் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, வடமாநிலத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கு, பிற மாநில போலீசாருடன் இணைந்து ஏ.டி.எம்., குற்றச்செயல்கள், அதில் ஈடுபட்டவர்கள் என எல்லாவற்றையும் தொகுக்க வேண்டும்.கன்டெய்னர் லாரி, அதற்குள் கார் என, திட்டமிட்டுச் செயல்பட, ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்க வேண்டும். அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வளைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
அக் 01, 2024 21:20

இதேபோல் இங்கு வந்து லொள்ளு பேசும் வட இந்தியஅரசியல்வாதிகளையும் சுளுக்கு எடுக்க வேண்டும்!


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2024 13:17

பாராட்டு சொல்றதைப்பாருடா வேங்கை வயல் குற்றவாளிகளையும் கரூர் காந்தி நவீன புனிதர் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி அசோக் அவர்களையும் நம்ம போலீசால கண்டு புடிக்கவே முடியலையாம். இன்டர் போல உதவியுடந்தான் கண்டு புடிக்கணும் போல இருக்கு. அதைப்பத்தி இவரு வாயே தொறக்கமாட்டேங்கறாரே கோப்பால்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 01, 2024 13:14

தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் தயாரிக்கப்படும் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் தமிழ் நாட்டு அரசு பாராட்டும், வரிச் சலுகை அளிக்கும் . அதுபோலத்தான் இருக்கிறது இவரது பேச்சும். மாதந்தோறும் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுவதே குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைப் பிடித்து சிறைக்கு அனுப்புவதற்குத்தான். அப்படி செய்துவிட்டால் அதற்கு பாராட்டு. அது சிறப்பு செய்தி என்ன கொடுமை சரவணா?


Rasheel
அக் 01, 2024 12:02

ஹரியானா மாநிலத்தில் மிக மோசமான மாவட்டம். அமைதி வழிக்காரர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று குற்ற செயல்களை செய்கின்றனர். சட்ட ஒழுங்கு, குற்ற செயல்களில் மிக மிக மோசமான மாவட்டம்


Jysenn
அக் 01, 2024 11:30

It is their duty. Praising or eulogizing someone for doing his duty is unnecessary.


Raj Kamal
அக் 01, 2024 12:36

Youre completely wrong When police risking their life in capturing criminals like this awards & rewards are very essentials to motivate them. Thisll energize their work and they will be more vigilant.


ram
அக் 01, 2024 11:21

கொள்ளையர்கள் அமைதி மார்க்க ஆட்கள் என்று தெரிந்தவுடனே இங்குள்ள திருட்டு திராவிட நியூஸ் channels , பத்திரிகைகள் இதை பத்தி எந்த நியூஸும் போடவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 01, 2024 09:41

முட்டுக்கொடுத்த டீம்கா அடிமைக்கு நன்றி... தமிழக போலீஸ் பல விஷயங்களில் களங்கப்பட்டு நிற்கிறது... சில விஷயங்களில் மட்டும் சாதனை செய்துள்ளது ......


பெரிய குத்தூசி
அக் 01, 2024 09:13

இதைத்தான் சார் நாங்களும் சொல்றோம். பயம் சார் எதிரிகளுக்கு பயம் இருக்கனும். உலக அளவில் இந்தியாவிற்கு எதிரா அல்லது இந்தியா தேடும் 150 தீவிரவாதிகளை ரா அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பிவிட்டது. அதேபோல் இந்தியாவிற்கு உள்ளே செயல்படும் பிரிவினைவாதிகளையும், வெளிநாட்டு சக்திகளுக்கு ஜலரா போடும் அரசியல் கட்சி பெயரில் ஒளிந்திருக்கும் கட்சி தலைவர்களையும் ரா நடவடிக்கையின் கீழ் கொண்டு வந்தாலே, பாகிஸ்தான், சைனா, முக்கியமாக அமெரிக்கா போன்ற எதிரி நாடுகளின் கொட்டம் அடங்கிவிடும். உள்ளூர் பிரிவினைவாதி கயவாளிகளை clear செய்தலே போதும், வெளிநாட்டு எதிரிகள் வாலை அடக்கிக்கொள்வார்கள். இந்தியா உள்ளே 100 க்கு குறைவா உள்ள வெளிநாட்டு கைக்கூலிகளை செஞ்சா போதும். முக்கியமாக தமிழகத்தில் குறைந்த பட்சம் 15 நபர்கள் மீது ரா நடவடிக்கை போதும், தமிழகம் பிரிவினைப்பாதையில் செல்லாமல் தடுத்துவிடலாம். இந்தியாவிற்கு எதிராக ஏதாவது செய்தால் உயிர் போய்விடும் என்ற பயத்தை உள்ளூர் துரோகிகளுக்கு உண்டுபண்ணுங்க ரா.


பாமரன்
அக் 01, 2024 08:36

தமிழக போலீஸ் செஞ்சது தரமான சம்பவம்தான்...


கிஜன்
அக் 01, 2024 06:31

ஜாங்கிட் சார் நல்லா இருக்கீங்களா ? 90 களில் பள்ளி மாணவனாக உங்களை சந்தித்தது .... அதற்கப்புறம் .... மிகப்பெரிய உயரத்திற்கு சென்றுவிட்டீர்கள் .... அனுமதி கிடைக்கவில்லை ..... மிக மிக மனித நேயம் மிக்க பண்பாளர் ஜாங்கிட் சார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை