உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

தென்னையில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

மேட்டுப்பாளையம்; தென்னை மரங்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும், மஞ்சள் ஒட்டும் பொறி பற்றியும், விவசாயிகளுக்கு வேளாண் பல்கலை மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, இளநிலை வேளாண்மை தமிழ் வழி நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகள், காரமடை வட்டாரத்தில் தங்கி, வேளாண் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுமுகை அடுத்த சம்பரவள்ளியில், இயற்கை விவசாயி விசுவநாதன் தோட்டத்தில், தென்னையில் ஏற்படும் நோய்கள் பற்றி, விவசாயிகளுக்கு செயல் விளக்கம் வாயிலாக பயிற்சிகள் அளித்தனர்.தென்னையில் மகசூலை அதிகம் பெருக்க, தென்னை டானிக், நுண்ணூட்டக் கலவை ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து, செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான, மஞ்சள் ஒட்டும் பொறியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ