உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.21 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்

ரூ.21 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள்

கோவை;மாநகராட்சி, 4வது வார்டு சரவணம்பட்டி, கந்தசாமி நகரில் மாநில நிதி கழக திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில், மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேயர் கல்பனா பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அப்பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில், உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். குழந்தைகளுடன் கலந்துரையாடிய அவர், நிறைவில்இனிப்புகள் வழங்கினார். உதவி செயற்பொறியாளர் எழில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ