மேலும் செய்திகள்
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025
கோவை: தமிழ்நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான அடிசியா டெவலப்பர்ஸ், விளையாட்டு துறையில் நுழைந்துள்ளது. ஸ்போர்டோராமா நிறுவனம் சார்பில், தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சூப்பர் லீக்கின் (கே.பி.எஸ்.எல், 2025) முதல் சீசன் நடத்தப்படுகிறது. இதில், 'அடிசியா சென்னை டைட்டன்ஸ்' என்ற பிராஞ்சஸை அடிசியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்டன், தற்போது தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவர் கூறியதாவது: நான்கு ஆண்டுகளாக கிக் பாக்ஸிங் விளையாட்டை, அடித்தள அளவில் வளர்க்க பணியாற்றிய பிறகு, இன்று பிராஞ்சைஸ் உரிமையாளராக மாறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அடிசியா சென்னை டைட்டன்ஸ், தமிழ்நாட்டின் இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அடுத்த கட்டத்திற்குச் செல்லவும், ஒரு வலுவான மேடையை உருவாக்கும். அடிசியா சென்னை டைட்டன்ஸ், கே.பி.எஸ்.எல்., தொடக்க சீசனில் போட்டியிட உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
02-Oct-2025