உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நரம்பு தேமல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

நரம்பு தேமல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வெண்டை பயிரில், நரம்பு தேமல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில், வெண்டை பயிர் ஆண்டு தோறும், 35 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தை பொருத்தவரையில் வெண்டை பயிரில் நரம்பு தேமல் நோய் ஆங்காங்கே உள்ளது. இதை கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதில், மீத்தைல் டெமட்டான், 800 மில்லி அல்லது தையோமித்தாக்ஸாம், 250 கிராமை தண்ணீரில் கலந்து பயிர்களில் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், நோயின் தீவிரத்தைப் பொறுத்து மீண்டும், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இந்நோயை கட்டுப்படுத்தலாம் என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ