உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார விவசாயிகள், பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும் சோளம் - 900 ஹெக்டேர், மக்காசோளம் - 50 ஹெக்டேர் மற்றும் கொண்டைக்கடலை - 25 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டை காட்டிலும், தற்போது பருவமழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், கொண்டைக்கடலை பயிர்களில் மகசூல் இழப்பினை தடுக்கும் வகையில், பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது. இதில், மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு பிரீமிய தொகை, 545 ரூபாயாக உள்ளது. அதிகபட்ச காப்பீடாக, 36,300 ரூபாய் வழங்கப்படும். சோளத்துக்கு பிரீமியம் தொகையாக, 173 ரூபாய் உள்ளது. இதற்கு அதிகபட்ச காப்பீட்டு தொகையாக, 11,503 ரூபாய் வழங்கப்படும். கொண்டைக்கடலைக்கு பிரீமியம் தொகையாக, 254 ரூபாய் உள்ளது. இதற்கு அதிகபட்சமாக 16,940 ரூபாய் வழங்கப்படும். மக்காச்சோளம் மற்றும் கொண்டைக்கடலை பயிருக்கு வரும் நவம்பர் 30ம் தேதியும், சோளம் பயிருக்கு டிசம்பர் 16ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். எனவே, விவசாயிகள் இந்த காப்பீட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும், என, கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை