உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டுப்பதிவு மையம் ஆய்வு செய்ய அறிவுரை

ஓட்டுப்பதிவு மையம் ஆய்வு செய்ய அறிவுரை

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு மையங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் துறையினருக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது.வரும் லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் முறை, பதட்டமான ஓட்டுப்பதிவு மையங்களை கண்டறிவது, அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, வருவாய் துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்டல தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு பிரிவு போலீசார், பதட்டமான ஓட்டுப்பதிவு மையங்களை ஆய்வு செய்யவும், இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மேலும், அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும், சாய்வு தளம், கட்டடத்தின் உறுதித் தன்மை, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஆகியவை குறித்து நேரில் பார்வையிடவும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் பணிகளில், வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண், பள்ளிக்கல்வி உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ