உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் அலுவலக தடுப்பு கம்பி சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

வேளாண் அலுவலக தடுப்பு கம்பி சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு வேளாண் அலுவலக முன்பக்க படிக்கட்டு தடுப்பு கம்பி, 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள், வேளாண் சார்ந்த மானிய திட்டங்கள், விதைகள் கொள்முதல் செய்யவும் மற்றும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் பெற வந்து செல்கின்றனர்.அலுவலகத்திற்குள் செல்லும் படிக்கட்டில், இரும்பு தடுப்பு கம்பி அமைக்கப்பட்டிருந்தது. லாரி மோதியதில் அந்த தடுப்பு கம்பி சேதமடைந்திருந்தது. இதுபற்றி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தடுப்பு கம்பி சீரமைப்பு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ