உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஐ.துல்லிய லேசிக் இயந்திரம் தி ஐ பவுண்டேசனில் அறிமுகம்

ஏ.ஐ.துல்லிய லேசிக் இயந்திரம் தி ஐ பவுண்டேசனில் அறிமுகம்

கோவை; கோவை தி ஐ பவுண்டேசன் மருத்துவமனையில், ஸ்மைல் புரோ எனும் அதிநவீன ஏ.ஐ. லேசிக் அறுவை சிகிச்சை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: ஐ பவுண்டேசன்மருத்துவமனையில், கடந்த, 1997 முதல் லேசிக் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் காலத்திற்கு ஏற்ப உடனுக்குடன் அறிமுகப்படுத்தி வருகிறோம். தற்போது, மயோபியா (கிட்டப்பார்வை) மற்றும் ஆஸ்டிஜிமாடிசம் உள்ளிட்ட பார்வை குறைபாட்டை சரிசெய்ய ஸ்மைல் புரோ எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அறுவைசிகிச்சை மிகவும் வேகமாக, துல்லியமாக மட்டுமின்றி உடனடியாக வழக்கமான பணிகளையும் மேற்கொள்ள முடியும். இந்த அறுவைசிகிச்சைக்கு ஊசி ஏதும் செலுத்தப்படுவதில்லை; அனஸ்தீஸ்சியா சொட்டு மருந்து மட்டும் கண்ணில் விடப்படுகிறது. வலி ஏதும் இன்றி குறைந்த நேரத்தில் அறுவைசிகிச்சை இரண்டு கண்களுக்கும் ஒரே சமயத்தில் செய்து முடிக்க இயலும். கார்னியாவை மறுவடிவமைக்க இத்தொழில்நுட்பம், ஒரு சிறிய 2-3 மி.மீ. துவாரத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. மேலும், ஒரு கண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்ள 8 வினாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிகழ்வில், மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷ்ரேயாஸ் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ