உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை

தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை

பொள்ளாச்சி; ''சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறும்; கட்சியினர் தேர்தல் களத்தில் இடைவிடாமல் பணியாற்ற வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். பொள்ளாச்சியில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தாமோதரன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கருப்பண்ணசாமி,ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: வரும், 9ம் தேதி பொள்ளாச்சியில் தங்கும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், அடுத்த நாள் (10ம் தேதி) கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, ஆனைமலையில் நடைபெறும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். அதன்பின், மாலை, 5:00 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதில், கமிட்டியினர் நன்றாக பணி செய்து, வாக்காளர்களை அழைத்து வர வேண்டும். வீடு, வீடாக சென்று நோட்டீஸ்களை வழங்கி பிரசாரத்துக்கு மக்களை அழைக்க வேண்டும். இந்த பிரசார கூட்டம், மாற்றத்தை உறுதிபடுத்தும். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகும். இனி வரும் ஆறு மாதங்களும், ஒவ்வொரு நாட்களும் முக்கியமான நாட்களாகும். கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல்களுக்கும் தயாராக வேண்டும். இவ்வாறு, பேசினார். கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரகுபதி, ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ