மேலும் செய்திகள்
ஜெ.,பேரவை சார்பில்துண்டு பிரசுரம் வழங்கல்
15-Feb-2025
மேட்டுப்பாளையம்; அ.தி.மு.க., ஜெ.பேரவை சார்பில், மேட்டுப்பாளையத்தில் திண்ணை பிரசாரம் துவங்கியது.மேட்டுப்பாளையம் ஓடந்துறை ராமசாமி நகரில், கோவை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில், திண்ணை பிரசாரம் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு நகர ஜெ., பேரவை செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் நாசர் மற்றும் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி செட் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அருண்குமார், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் திண்ணை பிரசாரத்தை துவக்கி வைத்து பேசினர்.அவர்கள் பேசுகையில், 'வருகிற சட்டசபை தேர்தல் வரை, ஒவ்வொரு கிளையிலும் உள்ள அ.தி.மு.க., வினர் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும். அதில் அ.தி.மு.க., செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் 2026ல் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க, இந்த திண்ணை பிரசாரம் உதவும்,' என்றனர்.துவக்க விழா கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள், கட்சியினர் ஆகியோர் பங்கேற்றனர். நகர துணை செயலாளர் பாலன் நன்றி கூறினார்.
15-Feb-2025