உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

ஆலத்தூர் மகா காளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னுார்; மொண்டிபாளையம் அருகே ஆலத்தூரில் பல நூற்றாண்டுகளாக கரிய காளியம்மன் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் கருங்கற்களால் செய்யப்பட்டு, 2012ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. இரவு முதற்கால வேள்வி பூஜையும், பேரொளி வழிபாடும் நடந்தது. 12ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வியும், விமான கலசங்கள் நிறுவுதலும், எண்வகை மருந்து சாத்துதலும் நடந்தது. மாலையில் மூன்றாம் கால வேள்வி நடந்தது.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கன்னி மூலை கணபதி, அரசரடி விநாயகர் மற்றும் சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.காலை 9:00 மணிக்கு கரிய காளியம்மன், மகா காளீஸ்வரர் விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. பஞ்சவாத்தியத்துடன், செண்டை மேளம், கைலாய வாத்தியம் மற்றும் ஜமாப் இசைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !