உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு

வேளாண் பல்கலையில் முன்னாள் மாணவர் சந்திப்பு

கோவை: வேளாண் பல்கலையில், 1995 - 1999 ஆண்டில், பி.எஸ்சி., அக்ரி பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முடித்து, 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பல்கலையில் பயின்ற, 105 மாணவர்களில், 65 பேர் சந்திப்பில் பங்கேற்றனர்.இவர்களில் பலர், ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஆக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று நடந்த நிகழ்ச்சியை ஐ.எப்.எஸ்., அதிகாரி சரவணன் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் துணை பொது மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, தங்களது கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களின் ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தனர்.முன்னாள் மாணவர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தனியார் ரெஸ்டாரன்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ