உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை

அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அண்ணா நகர் பகுதிக்கு, 21 என்ற எண்ணுள்ள அரசு பஸ் இயக்குவதில்லை. ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள்பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பிச் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, தெற்கு ஆர்.டி.ஓ. ராம்குமார், 25ம் தேதி நேரில் சென்று, மக்களிடம் விசாரித்தார். நேற்றும், இதுகுறித்து ஆர்.டி.ஓ. பேரூர் தாசில்தார், டி.எஸ்.பி. ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, 'தங்களுக்கு, 21 வழித்தட எண் கொண்ட பஸ் வராவிட்டாலும், அதற்கு பதிலாக, மாற்று பஸ் இயக்க வேண்டும். காலை 10 முதல் மாலை 3.30 மணி வரை பஸ்கள் வருவதில்லை. அந்த நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த, ஆர்.டி.ஓ. கலெக்டரிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை