உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னபூர்ணா நிறுவனர் நுாற்றாண்டு துவக்க விழா

அன்னபூர்ணா நிறுவனர் நுாற்றாண்டு துவக்க விழா

கோவை; கோவை ஸ்ரீ அன்னபூர்ணா உணவக குழுமத்தின் நிறுவனர் நுாற்றாண்டு துவக்க விழா கோல்டுவின்ஸ்சில் உள்ள மெர்லிஸ் ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் கோவை மாவட்ட ஹோட்டலியர் கள் சங்க தலைவர் ராமசாமி வரவேற்றார். தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் வெங்கட சுப்பு தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன் துவக்கி வைத்து பேசினார். விருந்தினராக பங்கேற்ற பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், ''ஏதாவது ஒன்றை செய்து அனைவரும் முன்னேற வேண்டும் என்று தான் செயல்படுவர். வெற்றி கிடைத்தவுடன் அதை தக்க வைத்துக் கொள்பவர் சிலர் தான். அதிலும் பெயரை தக்க வைத்துக் கொண்டவர்கள் மிக சிலர். குறிப்பிடத்தக்க இவர்களில் ஒருவர் தாமோதரசாமி நாயுடு,'' என்றார். கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''எளிமையான அணுகுமுறை கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர் தாமோதரசாமி நாயுடு,'' என்றார். தமிழருவி மணியன் பேசுகையில், ''உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம். அடக்கமும் பணிவும் மிக முக்கிய பண்பு. இவை, இருந்தால் வாழ்வில் உயர முடியும்,'' என்றார். நிகழ்ச்சியில், அன்னபூர்ணா குழும நிறுவனர் உருவ சிலையை, ஏவி குழுமத்தின் தலைவர் வரதராஜன் திறந்து வைத்தார். அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை