உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜாக்டோ -- ஜியோ   வேலை நிறுத்த மாநாடு ஒத்திவைப்பதாக அறிவிப்பு

ஜாக்டோ -- ஜியோ   வேலை நிறுத்த மாநாடு ஒத்திவைப்பதாக அறிவிப்பு

கோவை,; ஜாக்டோ -- ஜியோ அமைப்பின், வரும் 24ம் தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் உயர் மட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. இதில், ஜூலை 9ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில், ஜாக்டோ -- ஜியோ பங்கேற்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் அகில இந்திய அமைப்புகளின் போராட்டத்திற்கு, ஜாக்டோ -- ஜியோ ஆதரவு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'ஆயத்த மாநாடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டாலும், எங்களின் கோரிக்கைகள் குறித்த அழுத்தம் தொடர்ந்து வைக்கப்படும். ஜூலை 9ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், ஒருங்கிணைந்து பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை