உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

சூலுார் : சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மேலும் ஒருவர் பலியானார்.பல்லடம் அடுத்த மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் குப்பன், 50; டிரைவர். இவர் நேற்று முன்தினம், வீரன், 35, தங்கராஜ், 40, சுல்தான்பேட்டை மலை மந்திரி பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,35 ஆகிய தொழிலாளர்களுடன் டிராக்டரில் செஞ்சேரிமலைக்கு சென்றார். அங்கு மாட்டு சாணம் ஏற்றி கொண்டு, பி.ஏ.பி., வாய்க்கால் ரோட்டில் டிராக்டர் சென்றபோது, வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தங்கராஜ் டிராக்டரில் இருந்து குதிக்கும்போது காயமடைந்து பலியானார். வீரன், குப்பன் சிறு காயங்களுடன் தப்பினர். மணிகண்டன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை சுல்தான்பேட்டை ஆவின் குளிரூட்டும் நிலையம் அருகே வாய்க்காலில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் சடலமாக மீட்டகப்பட்டவர், டிராக்டர் விபத்தில் சிக்கிய மணிகண்டன் என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை