| ADDED : அக் 16, 2025 06:40 AM
போத்தனுார்: கோவை அருகே போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள், அங்கிருந்து வரும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில், கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில், மதுக்கரை அடுத்த சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் நேற்று மாலை, 4:00 மணிக்கு போலீசார் சோதனையை துவக்கினர். அங்கிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நீலவேணிதேவி, உதவியாளர் சாந்தி, அலுவலக உதவியாளர் பத்மா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதுபோல் தமிழகம் வரும் வாகனங்களுக்கான சோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர் ஷீலா தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரவு, 9:00 மணி வரை நீடித்த சோதனைகளில் கணக்கில் வராத, 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.