உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கமிஷனருக்கு வேண்டுகோள்

கமிஷனருக்கு வேண்டுகோள்

கோவை : கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதிசீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனுக்கு அனுப்பிய கடிதம்:கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட, 17 வார்டுகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில், சாலையோரம் அமர்ந்திருக்கும் நாய் கூட்டம், வாகனங்களில் அடிபட்டு, வாகனஓட்டிகளை கீழே விழச்செய்கின்றன.அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்வோரை, விரட்டி கடிக்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். கருத்தடை செய்ய வேண்டும். எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இவ்வாறு, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை