உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற அமைச்சரிடம் முறையீடு

குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற அமைச்சரிடம் முறையீடு

கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு முறையிட்டுள்ளது. கூட்டுக்குழு நிர்வாகிகள், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் நேற்று அளித்த மனு: வெள்ளலுார் கிடங்கில் குப்பை கொட்டப்படுவதால் எங்கள் ஊர் வாழ தகுதியற்றதாக மாறிவிட்டது. பல வருடங்கள் சட்ட போராட்டம் நடத்திய நிலையில் கடந்த, 2018ம் ஆண்டு டெல்லி பசுமை தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பு வழங்கியது. பல லட்சம் டன் குப்பையை பயோ மைனிங் முறையில் அழித்து நிலத்தை மீட்டெடுக்க வேண்டும். புதிதாக குப்பை கொட்டக்கூடாது எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளாகியும் குப்பை கொட்டுவது தொடர்கிறது.மாநகராட்சி நிர்வாகம் தீர்ப்பை மதிக்காத காரணத்தால் மீண்டும் கடந்த, 2022ல் வழக்கு தொடர,விசாரணையும் நடந்துவருகிறது. எனவே, வெள்ளலுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிப்பவர்களின் நிலைமை மற்றும் வருங்கால சந்ததியினரின் நலன்கருதி, வெள்ளலுார் கிடங்கை அகற்றி மாற்று இடத்தில் கொட்ட வேண்டும். கிடங்கில் அமையவுள்ள எரிவாயு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றிட நகராட்சி நிர்வாகத்திற்கு தக்க அறிவுரை வழங்க வேண்டுகிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை