உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்

நியமன கவுன்சிலர் பதவிக்கு 31 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை; கோவை மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவிக்கு, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில், ஒரு மாற்றுத்திறனாளியை, நியமன கவுன்சிலராக நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் விண்ணப்பம் பெறப்பட்டது. 17ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 16 பெண்கள், 47 ஆண்கள் என, 63 பேர் விண்ணப்பம் கொடுத்தனர். பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்ததால், 31ம் தேதி பிற்பகல், 3:00 மணி வரை விண்ணப்பம் வழங்க அவகாசத்தை நீட்டித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை