உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் குவிகிறது ... பரிசீலனை அடுத்த வாரத்தில் துவங்கும்

 வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் குவிகிறது ... பரிசீலனை அடுத்த வாரத்தில் துவங்கும்

கோவை :கோவை மாவட்டத்தில் புதிய வாக்காளர் பெயர் சேர்க்கும் பணிகள் துவங்குவதற்கு முன்னதாகவே, ஆன்லைன் மற்றும் நேரடியாக, 30,000 விண்ணப்பங்களை புதிய வாக்காளர்கள் சமர்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இதற்காக சனி மற்றும் ஞாயிறுகளில் ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. அதற்குள் ஆன்லைன் வழியாக மட்டும், 11,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் மார்ச் மாதம் 18 வயது பூர்த்தி ஆகும் நிலையில் உள்ள புது வாக்காளர்கள். ஓட்டுரிமை கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உள்ளனர். இது தவிர, வரைவு வாக்காளர் பட்டியல் கணக்கீட்டுப்பணியின் போதே 19,000 பேர் படிவம் 6 பூர்த்தி செய்து சமர்பித்துள்ளனர். முகவரி மாறியதால் வரைவு பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், வார இறுதி முகாம்களில் படிவம் 8 வாங்கி பூர்த்தி செய்து கொடுப்பார்கள். இதனால், விண்ணப்பங்கள் மலையாக குவியும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் 25,74,608 வாக்காளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை பிப். 16 ல் வெளியாகும் இறுதி பட்டியலில் கணிசமாக அதிகரிக்கும் என மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கணிக்கின்றனர். ''சனி, ஞாயிறு சிறப்பு முகாம்கள் 16 நாட்கள் நடக்க இருப்பதால், நிச்சயமாக 50,000 விண்ணப்பங்களுக்கு மேல் வரும். படிவங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து, நுாறு சதவீதம் சரியாக இருக்கும் பட்சத்தில் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும். பெயர் இடம் பெறாமல் போகுமோ என எவரும் கவலைப்பட தேவையில்லை” என உயர் அதிகாரிகள் நமது நிருபரிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி