உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்

உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் சுழற்சி முறையில் ஆசிரியர் நியமனம்

கோவை; அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில், உயர்கல்வி வழிகாட்டி மையங்களில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் நியமிக்க, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஜே.இ.இ., க்யூட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக, வட்டார அளவில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. பயிற்சி வழங்க இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில், முதுகலை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை