உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி.,யில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

கே.ஐ.டி.,யில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

கோவை: கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு, பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.கல்லுாரியின் நிறுவனத் தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி தலைமை வகித்தார்.தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி சுவர்ணநிதி ராவ், பாஷ் பவர் டூல்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி பிரதீப், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.70க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட பொறியியல் தொழில் நிறுவனங்களிடமிருந்து, 1036 மாணவர்கள்ஆணைகளை பெற்றனர். அதிகபட்ச சம்பள தொகுப்பாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம், சராசரி சம்பள தொகுப்பாக 6 லட்சம் ரூபாய் அளவுகளில் மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில், வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.கல்லுாரி துணைத் தலைவர் இந்து, தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி, வேலைவாய்ப்புத்துறை அதிகாரி மஹாலட்சுமிஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை