உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொதுத்தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா?

பொதுத்தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் இருக்கா?

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, பொதுத்தேர்வு மையங்களில், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3 முதல், 25ம் தேதி வரை நடக்கிறது. அதேபோல, பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 5 முதல் 27ம் தேதி வரையும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 28 முதல், ஏப்., 15ம் தேதி வரையும் நடக்க உள்ளது.அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதத்தேர்வுக்கு, 90க்கும் மேற்பட்ட மையங்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கு, 30க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன.மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், பள்ளிகள் தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, செய்முறைத்தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், மையங்களில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வழக்கம்போல, இம்மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை, தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கடந்த கல்வியாண்டுகளில், பொதுத்தேர்வு நடந்த பள்ளிகளிலேயே மையம் அமைக்கப்படும் என்பதை தலைமையாசிரியர்கள் அறிந்து வைத்திருப்பர்.அதற்கேற்ப, தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், தனித்தேர்வர்களை அறிவுறுத்தும் வகையில், எச்சரிக்கை அறிவிப்புகள் தயார்படுத்தப்படுத்தி வருகின்றனர். மேலும், பள்ளிகளில், குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் முறையாக இருப்பதையும் உறுதி செய்து வருகின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை