போக்சோ கோர்ட்டில் தகராறில் ஈடுபட்டவருக்கு பிடிவாரன்ட்
கோவை; கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான், 32; போக்சோ வழக்கில் கைதான இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. ஜாமினில் சென்ற அவர், கடந்த, 27ம் தேதி, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது, திடீரென கோர்ட்டுக்குள் தேசியக்கொடியுடன் புகுந்து தகராறில் ஈடுபட்டார். பின், அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்தனர். அவர் மீதான போக்சோ வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. ரிஸ்வான் கோர்ட்டில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.