உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா

அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா

வால்பாறை,; தமிழக அரசு உயர்கல்வித்துறை உத்தரவின் பேரில், அரசு கல்லுாரிகளில் கலைத்திருவிழா கடந்த, 16ம் தேதி முதல் நடக்கிறது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கலைத்திருவிழா நடைபெற்று வருகிறது. கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் மண்பானையில் உணவு தயாரித்தும், சமையல் செய்து கண்காட்சியில் இடம் பெறச்செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை