உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்தது கொரோனா சுகாதார துறை நிம்மதி

குறைந்தது கொரோனா சுகாதார துறை நிம்மதி

கோவை, : மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், சுகாதார துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில், கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு இருந்து வருகிறது. கடந்த மாத இறுதி முதல், இம்மாத துவக்கம் வரை பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது.அதிகபட்சமாக, இம்மாத துவக்கத்தில், ஒரே நாளில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முதியவர் ஒருவர் பலியானார். இதையடுத்து சுகாதார துறை சார்பில், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த, காய்ச்சல் சிறப்பு முகாம்கள் வாயிலாக அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. தற்போது மாவட்டத்தில் 'கிளஸ்டர்' எனும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்படாததால், சுகாதார துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ