உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோயில்களின் உண்டியலை உடைத்து திருட முயற்சி

கோயில்களின் உண்டியலை உடைத்து திருட முயற்சி

கோவை; தெலுங்குபாளையம் உடையார் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 50. சொக்கம்புதுார் பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோயில் நிர்வாகியாக இருக்கிறார். ஜூன் 9ல் கோயிலின் பின்பகுதி வழியாக உள்ளே நுழைந்த இரு நபர்கள், மின்சாரத்தை துண்டித்து விட்டு, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருட முயற்சித்தனர். பணம் இல்லாததால் தப்பினர். தொடர்ந்து, 19ம் தேதி மீண்டும் உண்டியலை உடைத்து திருட முயற்சித்தனர். உண்டியலை உடைத்தவர்களை அடையாளம் காண முடியாததால், செல்வபுரம் போலீசாரிடம் செந்தில்குமார் புகார் அளித்தார். வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், செல்வபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலிலும், திருடர்கள் உண்டியலை உடைத்து திருட முயன்றது தெரிந்தது. கோயில் நிர்வாகி கதிர்வேல் அளித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ