மது குடிக்க முடியாததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
தொண்டாமுத்தூர், ;குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ஞானவேல், 50; ஆட்டோ டிரைவர். மனைவி, இரு மகள்கள் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த ஞானவேல், இரண்டு மாதங்களுக்கு முன், குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற்றுள்ளார்.இதனையடுத்து, இரண்டு மாதங்கள் மது குடிக்காமல் இருந்துள்ளார். கடந்த புத்தாண்டு தினத்தில், ஞானவேல் மீண்டும் மது அருந்தியுள்ளார். இதனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.மனைவி மாலையணிந்து, கோவிலுக்கு சென்று விட்டார். வீட்டில், ஞானவேல் மற்றும் அவரது மகள்கள் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, ஞானவேல் தனக்கு வயிறு வலிப்பதாகவும், மீண்டும் மது அருந்த வேண்டும் எனவும் புலம்பியுள்ளார்.அதன்பின், அறைக்கு தூங்க சென்றுள்ளார். நேற்று காலை வெகு நேரமாகியும், அறையை விட்டு அவர் வெளியே வராததால், மகள்கள் இருவரும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.ஞானவேல் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.