உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உறவினருடன் பழகுவதை கண்டித்த ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

உறவினருடன் பழகுவதை கண்டித்த ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

கோவை; கோவை, கணபதி, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன், 61; ஆட்டோ ஓட்டுநர். இவர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ ஓட்டுகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் காந்திபுரம், 100 அடி ரோட்டை சேர்ந்தவர் பரசுராமன், 37 ஆட்டோ டிரைவராக உள்ளார்.ஸ்ரீநிவாசனின் அக்கா மகன் மற்றும் பரசுராமன் ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். பரசுராமனுடன் சேர்ந்து தனது அக்கா மகன்,தவறான பாதையில் செல்வதாக ஸ்ரீநிவாசனுக்கு தகவல்கிடைத்தது.அவர் பரசுராமனிடம், தனது அக்கா மகனை கெடுக்காதே என கண்டித்துள்ளார். இது குறித்து, பரசுராமன் ஓட்டும் ஆட்டோ உரிமையாளரிடமும் தெரிவித்தார்.இதனால், ஆட்டோ உரிமையாளர், பரசுராமனிடம் இருந்து ஆட்டோவை பெற்றுக்கொண்டார்.பரசுராமன் ஆத்திரமடைந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி ஸ்ரீநிவாசன் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த போது, அங்கு வந்த பரசுராமன் வாக்குவாதம் செய்தார்.தொடர்ந்து, ஸ்ரீநிவாசனை தகாத வார்த்தைகளால் திட்டி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு, கை, நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் குத்தினார்.ஸ்ரீநிவாசனின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பரசுராமன் அங்கிருந்து தப்பி ஓடினார்.காயமடைந்த ஸ்ரீநிவாசன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காட்டூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, பரசுராமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை