உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை விமானநிலையத்தில் தானியங்கி கண்ணாடி பணால்

 கோவை விமானநிலையத்தில் தானியங்கி கண்ணாடி பணால்

கோவை: அவசரமாக வெளியே செல்ல முயன்ற பயணியின் சூட்கேஸ் பட்டு, கண்ணாடி உடைந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை கோவை விமான நிலையத்திற்கு, சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. இதிலிருந்து பயணி ஒருவர் அவசரமாக வெளியே வந்தார். அதில் தானியங்கி கண்ணாடி கதவில், அவரது சூட்கேஸ் பட்டு கண்ணாடி கதவு உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய அதிகாரிக ள் விசாரித்தனர். அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது எனத் தெரிந்தது. அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது விவரங்களை பெற்ற பின், அவரை அதிகாரிகள் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை