மேலும் செய்திகள்
குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி
15-Nov-2025
சூலூர்: கே.எம்.சி.எச்., சார்பில், குழந்தைகள் இருதய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 29ம் ஆண்டு மாரத்தான் போட்டி, சூலூரில் நடந்தது. மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி முன்னிலை வகித்து பேசுகையில், குழந்தைகளுக்கு ஏற்படும் இதய நோய்களை, முன் கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மராத்தான் போட்டி நடத்தப்படுகிறது, என்றார். எஸ்.பி., கார்த்திகேயன் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில், இதுபோன்ற போட்டிகள் மக்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். சமுதாயத்தில் மாற்றம் ஏற்படும், என்றார். செயல் இயக்குனர் அருண் பழனிசாமி மற்றும் மருத்துவர்கள், செவிலியர், மாணவ, மாணவியர் உட்பட, 4 ஆயிரம் பேர் 16 கி.மீ., ஓடினர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
15-Nov-2025