உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண், பூமியை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

மண், பூமியை பாதுகாக்க விழிப்புணர்வு பேரணி

கோவை: மண் காப்போம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவைப்புதுாரில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது. கோவை 'பெடலர்ஸ் சைக்கிளிங் கிளப்', நேரு கல்வி குழுமம் சார்பில் 'மண் காப்போம், பூமியை பாதுகாப்போம்' என்ற பெயரில், நேற்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியை, நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள், பெரியவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவைப்புதுார் 'ஏ' மைதானத்தில் துவங்கி, ஈஷா யோகா மையம் வரை 20 கி.மீ., சைக்கிள் பேரணி சென்றனர். பேரணியில் பங்கேற்றவர்களுக்கு டீ சர்ட், பதக்கம் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை