உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் கொடிசியாவில் விழிப்புணர்வு கருத்தரங்கு

 குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் கொடிசியாவில் விழிப்புணர்வு கருத்தரங்கு

கோவை: கொடிசியாவில், குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. இதில், கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசியதாவது: குறு, சிறு நிறுவனங்களுக்கு கடனுதவி என்பதற்கான இடைவெளி அதிகமாக உள்ளது. கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதித் தேவையில், வங்கிகள் வாயிலாக 20 சதவீதத்தையே பெற முடிகிறது. மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கிக்கான ஆலோசனை நிலைக்குழு உட்பட பல்வேறு தளங்களிலும் இவ்விஷயத்தை, கொடிசியா பேசியுள்ளது. குறு, சிறு நிறுவனங்களுக்கு பிணையமில்லா கடன் உத்தரவாத திட்டத்தை நிறைவேற்ற, வங்கிகள் முன்வர வேண்டும். குறிப்பாக, இப்பகுதியில் எம்.எஸ்.எம்.இ., துறையை வலுப்படுத்தும் விதத்தில், குறு உற்பத்தி அலகுகளுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மகளிர் உலக வங்கி தன்னார்வ அமைப் பின் (டபிள்யூ.டபிள்யூ.பி.,) முது நிலை தொடர்பு மேலாளர் நிர்மலா வேதுலா, உற்பத்தித் துறையில் மகளிர் பங்களிப்பு அவசியம் என ஊக்குவித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், எம்.எஸ்.எம்.இ., மண்டல வசதியாக்கல் அலுவலக உதவி இயக்குநர் கயல்விழி, குறு, சிறு, நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்ட அறக்கட்டளை, துணை பொதுமேலாளர் மூர்த்தி உட்பட பலர், நிதி சார் திட்டங்கள் குறித்து விளக்கினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை