உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடற்புழு பாதிப்பு தடுக்க விழிப்புணர்வு

குடற்புழு பாதிப்பு தடுக்க விழிப்புணர்வு

பொள்ளாச்சி- இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரை அளிக்கலாம் என, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் நலப் பிரிவு தலைமை மருத்துவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.தொடர்ந்து, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு, அதன் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது.மேலும், காணொலி காட்சி வாயிலாக, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் குடலில் புழு அதிகரித்தால், ரத்தசோகை நோயை உண்டாக்கும். பிரசவத்தின் போது தாய்மார்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். அதிக ரத்தசோகை உள்ள பெண்கள், இறுதிகட்டத்தில் பிரசவத்திற்கு வரும் போது உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.வளரிளம் பெண்களுக்கு வாரம் ஒருமுறை இரும்பு சத்து மாத்திரைகள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரை அளிக்கலாம். இரு வாரங்களுக்குப் பின், இரண்டாவது டோஸ் மாத்திரை வழங்கலாம் என, விளக்கப்பட்டது.எனவே, ஒன்று முதல், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தவறாமல் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். ரத்த சோகை, எடை குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க விழிப்புணர்வு பெற வேண்டும்.பள்ளி செல்லும் குழந்தைகள், வீட்டில் இருக்கும் சிறுவர்கள் இந்த மாத்திரையை உட்கொள்ளும் போது, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படும். ஆரோக்கியமாக இருப்பார்கள், என்றனர்.குழந்தை நல மருத்துவர் அமுதா, செவிலியர் கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி, ராணி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ