உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி-மண்டல ஆண்கள் வாலிபால் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி அபாரம்

பி-மண்டல ஆண்கள் வாலிபால் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி அபாரம்

கோவை; 'பி'-மண்டல ஆண்கள் வாலிபால் போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும், 18 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, 14 பேர் அடங்கிய அணி பல்கலைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படுகின்றன.பாரதியார் பல்கலை அணியை தேர்வு செய்யும் விதமாக, 'பி'-மண்டலத்துக்கு கோவை அரசு கலைக் கல்லுாரியிலும், சி-மண்டலத்துக்கு பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியிலும், 'டி'-மண்டலத்துக்கு ஈரோடு இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிக கல்லுாரியிலும் போட்டிகள் நடந்தன.கோவை அரசு கலைக் கல்லுாரியில் நடந்த போட்டியில், 21 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியும், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியும் மோதின. துடிப்புடன் விளையாடிய பி.எஸ்.ஜி., அணி வீரர்கள், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.இந்துஸ்தான் கல்லுாரி அணி இரண்டாம் இடம் பிடித்தது. கே.பி.ஆர்., கல்லுாரி, 2-0 என்ற செட் கணக்கில், சூலுார் ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம்பிடித்தது.வெற்றி பெற்றவர்களுக்கு, அரசு கலைக் கல்லுாரி முதல்வர் எழிலி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கினார். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி செல்வராஜ் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி