உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்கம்பத்துக்கு மாற்றாக அமைக்கப்படுமா பேபி டவர்! : மார்க்கெட் ரோடு புதுப்பொலிவு பெறுமா?

மின்கம்பத்துக்கு மாற்றாக அமைக்கப்படுமா பேபி டவர்! : மார்க்கெட் ரோடு புதுப்பொலிவு பெறுமா?

பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், 'பேபி டவர்' முறையில் 40 அடிக்கு மேல் மின்கம்பிகளை அமைக்கும் வகையில் கம்பங்கள் நிறுவ வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரவுண்டானா அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கியது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.அதேநேரம், ரவுண்டானா அமைக்கப்பட உள்ள இடம் அருகே டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் இருந்ததால், அவற்றை மாற்றியமைக்கும் பணியில் மின்வாரிய துறையினர் ஈடுபட்டும் வருகின்றனர். இதனால், ரவுண்டானா அமைக்கும் பணி, துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.அங்கு நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களுக்கு, மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள நிலையில், மார்க்கெட் ரோட்டில், 'யுடேர்ன்' அமைக்கப்படுகிறது.இந்நிலையில், சென்டர்மீடியன் உள்ள பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.கம்பங்கள் மீது வாகனம் மோதி விபத்து மற்றும் பேரிடர் காலத்தில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் பயணிக்கின்றனர். இதனால், 'பேபி டவர்' முறையில், 40 அடிக்கு மேல் மின்கம்பிகளை அமைக்கும் வகையில் கம்பங்கள் நிறுவ கோரிக்கை எழுந்துள்ளது.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி நகரில், வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவள்ளுவர் திடல் பகுதியில் மார்க்கெட், மொத்த வியாபார கடைகள் உள்ளிட்ட பல வணிக கடைகள் பெருகி வருகின்றன.கனரக வாகனங்கள் அடிக்கடி கடந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. எனவே, 'பேபி டவர்' முறையில் மின் கம்பங்களை அமைத்து, மின் கம்பிகளை இணைக்க வேண்டும். 40 அடிக்கு மேல் மின்கம்பிகள் அமைக்கப்படும்போது, எந்தவொரு கனரக வாகனகமும் பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதற்கான சூழல் தற்போது இல்லை!

திருவள்ளுவர் திடல் பகுதியில், ஏற்கனவே, தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நெடுஞ்சாலையை கடந்து, மின் இணைப்பு கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, ரோடு விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அகற்றி, மாற்றியமைக்கப்படுகின்றன.விதிப்படி, வீட்டு இணைப்புக்கும் மின் கம்பத்திற்கும் இடையே, 5 அடி இடைவெளி அவசியம். அவ்வாறு, இடைவெளி விட்டு மின்கம்பங்கள் அமைத்தால், 2 மீ., துாரத்திற்கு ரோட்டினை விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலையில், சென்டர்மீடியன் பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த மின்கம்பங்களை விட இதன் உயரம் அதிகம். 'பேபி டவர்' அமைத்தாலும் வீடுகளுக்கு இணைப்பு வழங்க முடியாது. அதற்கான சூழல் தற்போது ஏற்படவில்லை என்கின்றனர், நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள்------.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி