உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி பால்காரர் பலி

தொண்டாமுத்தூர்; மத்வராயபுரத்தில், அதிவேகமாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், பால்காரர் உயிரிழந்தார்.இருட்டுப்பள்ளம், காரைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து, 53. வீடு வீடாக பால் விற்பனை செய்து வந்தார். இவர், கடந்த, 14ம் தேதி, மாலை, வீடுகளுக்கு பால் ஊற்றுவதற்காக, தொம்பிலிபாளையம், சிறுவாணி மெயின்ரோட்டில், தனது இருசக்கர வாகனத்தில் (ஹெல்மெட் அணியவில்லை) வந்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்திசையில் அதிவேகமாக வந்த கார், காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீதுமோதி விபத்துக்குள்ளானது. இதில், காளிமுத்து தூக்கி வீசப்பட்டு தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், காளிமுத்துவை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி காளிமுத்து உயிரிழந்தார். காரை அதிவேகமாக ஓட்டி வந்த ஆலாந்துறையை சேர்ந்த பிரவீன்ராஜ், 39 என்பவர் மீது ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை