உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,507.87 கோடி வங்கி கடன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,507.87 கோடி வங்கி கடன்

கோவை; கோவை மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், 57 ஆயிரத்து, 241 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,505.87 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மகளிர் திட்டம் சார்பில், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பத்தை சேர்ந்த பெண்களை கொண்டு சுய உதவிக்குழுக்கள் அமைத்து, வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி, தனி நபர் கடன், குழு கடன் மற்றும் வங்கி கடன் வழங்கப்படுகிறது.கோவை மாநகராட்சியில், 5,356 மகளிர் குழுக்கள், நகராட்சிகளில் 1,248, பேரூராட்சிகளில் 2,034, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 7,700 குழுக்கள் என, 16 ஆயிரத்து, 338 குழுக்கள் செயல்படுகின்றன.மாவட்ட அளவில், 2021-22ல், 13,171 குழுக்களுக்கு ரூ.769.53 கோடி, 2022-23ல் 13,181 குழுக்களுக்கு ரூ.856.53 கோடி, 2023-24ல் 15,324 குழுக்களுக்கு ரூ.923 கோடி வழங்கப்பட்டிருககிறது.2024-25ல் ரூ.1,229 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை, ரூ.956.81 கோடி, 15,565 குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 57,241 குழுக்களுக்கு ரூ.3,505.87 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில், ஊரக பகுதிகளில் 328 தன்னார்வலர்களாகவும், நகர்ப்புற பகுதியில், 176 தன்னார்வலர்களாகவும் பணிபுரிந்து வருவதாக, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !