உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோபோட்டிக் போட்டியில் பண்ணாரி அம்மன் சாதனை

ரோபோட்டிக் போட்டியில் பண்ணாரி அம்மன் சாதனை

கோவை: திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய, 'கான்சைன்சியா' விழாவின் ஒரு பகுதியாக, ரோபோட்டிக் மேஸ் சால்வர் போட்டி நடந்தது. இந்த போட்டியில், நாடு முழுவதிலிருந்தும் முன்னணி பல்கலை, கல்லுாரிகள் பங்கேற்றன. சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் மூன்று அணிகளாக பங்கேற்றனர். பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியின் ஐ.ஓ.டி.,ஆய்வகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சர்வேஷ், சதீஷ், பிரசன்னா, காவியா, மிதுன்ராம் மற்றும் கோகுல் பிரசாத் ஆகியோர் முதல் பரிசைப் பெற்றனர். எம்படட் டெக்னாலஜி ஆய்வகத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ரோஷன் பிரகாஷ், விஷ்வா, சந்துரு, பரமசிவம் மற்றும் கோபுநாத் ஆகியோர் இரண்டாம் பரிசைப் பெற்றனர். பி.சி.பி.,ஆய்வகத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நவீன், மாதேஷ் , வினித் மற்றும் சபரிநாத் ஆகியோர் மூன்றாம் பரிசை வென்றனர். போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதல் மூன்று இடங்களையும் வென்று சாதனை படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை