‘டாஸ்மாக்’ கடைகளில் ‘பார்’ புதிய விதிகள் வெளியீடு
சென்னை: ‘மலைவாழ் மக்கள் வசிக்கும் மலைப் பகுதிகளில், ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்கள் திறக்கக் கூடாது’ என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டாஸ்மாக் மது கடைகளை ஒட்டி, மதுக்கூடங்கள் அமைப்பதற்கான புதிய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: டாஸ்மாக் கடையை ஒட்டிய இடம் அல்லது கடையில் இருந்து, 100 மீட்டருக்குள் மதுக்கூடம் இருக்க வேண்டும் ஒப்பந்தம் வழங்குவதற்கான அடிப்படை விலையை, டாஸ்மாக் முடிவு செய்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும் வசூலிக்கப்படும் தொகையில், ஒரு சதவீதத்தை டாஸ்மாக் எடுத்துக் கொண்டு, மீதியை அரசுக்கு செலுத்த வேண்டும் மாநகராட்சி, நகராட்சிகளில் வழிபாட்டு தலம், கல்வி நிறுவனங்களில் இருந்து, 50 மீட்டருக்குள், மற்ற பகுதிகளில், 100 மீட்டருக்குள் மதுக்கூடம் அமைக்கக் கூடாது ஹோட்டல் வளாகத்தில் மதுக்கூடம் அமைக்கக் கூடாது. மலைவாழ் மக்கள் வசிக்கும், வேலுார், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், மலைப் பகுதிகளில் மதுக்கூடங்கள் திறக்கக் கூடாது குறைந்தது, 20 சதுர மீட்டர் இடம் இருக்க வேண்டும். இவ்வாறு, அரசு தெரிவித்துள்ளது.