மேலும் செய்திகள்
வசதி இல்லா அரசு அலுவலக வளாகம்
27-Jul-2025
கோவை; பாஸ்போர்ட் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கோவை, பீளமேட்டில் செயல்படும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், முறையான காத்திருப்பு அறை, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால், பாஸ்போர்ட் ஆபிசிக்கு வருவோர் மிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். பணியாளர்களுக்கு அலுவலக வளாகத்தில், பாதுகாப்பாக வாகனம் நிறுத்த இடம் வசதி செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் எடுக்க வரும் விண்ணப்பதாரர்கள் சாலைகளில் வாகனத்தை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிறுத்தப்படும் போது, 'நோ பார்க்கிங்' பகுதி எனக்கூறி போலீசார் அபராதம் விதிக்கின்றனர். பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தி தனி இட வசதி செய்து தர வேண்டும். மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், நகரிலிருந்து வெகு துாரத்தில் பீளமேட்டில் செயல்பட்டு வருவதால், பாஸ்போர்ட் எடுக்க செல்வோருக்கு மிக சிரமமாக இருக்கிறது. இது தொடர்பாக, கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் என்ற நுகர்வோர் அமைப்பு சார்பில், அதன் தலைவர் சி.எம்.ஜெயராமன் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில், 'அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவில் எதிரே, மாநகராட்சி வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில், புதிய புகைப்படம் எடுப்பது, ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட ஆணவங்களை சரிபார்ப்பது போன்ற எளிய புதுப்பிப்பு விண்ணப்பங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் கூட்டம் நெரிசலை குறைப்பதோடு, விண்ணப்பதாரர்கள் பயண துாரம் குறையும். போதுமான அடிப்படை வசதிகள் இருக்ககூடிய இடத்திற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தை மாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
27-Jul-2025