வாசகர்கள் கருத்துகள் ( 1 )
We always take it as spritual drink during Pooja, and my kids eat it as fresh as available
இரவு உணவுக்குப் பிறகு காலை வரை நீண்ட நேரம் நாம் எதுவும் அதிகமாக சாப்பிடுவது இல்லை. மறுநாள் காலையில் ஆரோக்கியமான உணவைக் கொண்டு அந்த வயிற்றை நிரப்புவது பல நன்மைகளை தரும்.தினமும் வெறும் வயிற்றில் துளசி நீரை குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் முதல் சிறுநீரகக் கோளாறு வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம். அவற்றைத் தடுப்பதற்கும் துளசி இலைச் சாறு உதவுகிறது. துளசியின் இலைகள், தண்டுகள், பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் மருத்துவ குணம் கொண்டவை. இதுவே இதன் சிறப்பு. துளசி இலை நீரை தினமும் குடித்து அன்றைய தினத்தை தொடங்கினால், ஒரு மாதத்தில் பல நல்ல மாற்றங்களை உங்களுக்குள் காணலாம். துளசி இலை நீர் தயாரித்தல்
சிறிது துளசி இலைகள் அல்லது விதைகளை எடுத்து வெந்நீரில் போடவும். இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் தினமும் குடிக்கவும். இவற்றை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத பலன்கள் கிடைக்கும். சளி, தொண்டை வலி
துளசி இலையின் சாற்றை தினமும் குடித்து வந்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை தீரும். தினமும் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிடுவது நல்லது. அந்த துளசி இலைகளுக்கு சிறிது தேன் தடவி மென்று சாப்பிடுங்கள். இது சுவாச பிரச்னைகளை குறைக்கிறது. சளி அதிகமாக சுரப்பதை தடுக்கிறது. தொண்டை வலியையும் குறைக்கிறது. சிறுநீரக ஆரோக்கியம்
நமக்கு தெரியாமலே சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சிறுநீரகத்தை பாதுகாக்க துளசி உதவும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலை நீரை அருந்த வேண்டும். துளசி இலை நீர் சிறுநீர் பாதையில் உள்ள கற்களை அகற்ற உதவுகிறது. இல்லையென்றால் குறைந்தது ஆறு மாதமாவது இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். சர்க்கரை நோய்
துளசி இலையில் நீரிழிவு நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. துளசி ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்க உதவுகிறது. இரண்டு மூன்று துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது நல்லது. அல்லது ஒரு தேக்கரண்டி துளசி இலை சாறு குடிப்பது நல்லது. துளசி இலை நீரை குடிப்பதாலும் இந்த நன்மைகள் உள்ளன. அழற்சிக்கு எதிர்ப்பு
சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் தோல் நோய்களைக் குறைக்க உதவுகிறது. பூஞ்சை தொற்று ஏற்படும் போது துளசி சாற்றை காயங்களின் மீது தடவுவது மிகவும் நன்மை பயக்கும். இருதய ஆரோக்கியம்
துளசியில் வைட்டமின் சி உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. அவை இதயத்தை தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. துளசி சாப்பிடுவது இஞ்சி, பூண்டு, சிவப்பு திராட்சை மற்றும் பிளம்ஸ் சாப்பிடுவதற்கு சமம். ரத்த அழுத்தம் குறையும்
துளசி இலையில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. துளசி இலையை சாற்றை தினமும் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் துளசி இலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்குள் உயர் இரத்த அழுத்தம் இயல்பாகவே கட்டுக்குள் வரும்.
We always take it as spritual drink during Pooja, and my kids eat it as fresh as available