உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொகுதி வளர்ச்சி நிதியில் பணிகளுக்கு பூமி பூஜை

தொகுதி வளர்ச்சி நிதியில் பணிகளுக்கு பூமி பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி எம்.எல்.ஏ. தொகுதி நிதியில், வளர்ச்சிப் பணிகளை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். பொள்ளாச்சி அருகே, வடுகபாளையம் திருமூலர் வீதி, மணிமேகலை வீதியில், பொள்ளாச்சி எம்.எல்.ஏ. தொகுதி நிதியில் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால், கான்கிரீட் தளம் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதே போன்று, என்.வி.எம். வீதியில் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில், தார்தளம் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் சாந்தி, ஜேம்ஸ்ராஜா, நிர்வாகிகள் அருணாச்சலம், கனகு, மாரிமுத்து, ராஜ்கபூர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை