உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தார் சாலை அமைக்க நடந்த பூமி பூஜை

தார் சாலை அமைக்க நடந்த பூமி பூஜை

உடுமலை-உடுமலை ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாநில நிதிக்குழு மானியத்தின் (மாவட்ட ஊராட்சி) கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது.அவ்வகையில், ரங்கநாதர் லே அவுட்டில், தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யபாமா ஆகியோர் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினர்.விரைந்து பணிகளை முடிக்க, அதிகாரிகளை அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., உடுமலை கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜெகநாதன், ஒன்றியத் துணைச்செயலாளர் உமாமகேஸ்வரி, கிளைச்செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி