பட்டியலின தலைவர்களை கவுரவிக்க பா.ஜ., முடிவு
அன்னுார்: மாவட்ட அளவிலான விழாவில் பட்டியலின தலைவர்களை கவுரவிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், வருகிற 27ம் தேதி காலை 10:00 மணிக்கு, அவிநாசி, கொங்கு கலையரங்கத்தில், மாவட்ட அளவிலான அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் தேசிய பொறுப்பாளர் சுதீர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இதற்கான ஆலோசனைக் கூட்டம் அன்னுாரில் நடந்தது. இந்த விழாவில் சாதித்த பட்டியலின தலைவர்களை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டது. சூலூர், அவிநாசி, மேட்டுப்பாளையம் தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் ஜெகநாதன், மாவட்ட நிர்வாகிகள் விக்னேஷ், ராஜராஜசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.