உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து விட்டது பா.ஜ.,

புறக்கணிக்க முடியாத அரசியல் சக்தியாக வளர்ந்து விட்டது பா.ஜ.,

கோவை:''பொது சிவில் சட்டம்பெண்களுக்கு நீதி கிடைக்க செய்வதோடு, பாதுகாப்பையும் வழங்கும்,'' என்று பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கூறினார்.நேற்று நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. இதனால் விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் எடுத்தும், மத்திய அரசால் பணிகளை துவக்க முடியவில்லை. நகரின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது; மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.பொது சிவில் சட்டம், பெண்களுக்கு நீதியும்; பாதுகாப்பும் கிடைக்க செய்யும் சட்டம். மதபாகுபாடு இல்லாமல் பெண்களுக்கு சொத்து, திருமணம் போன்றவற்றில் நீதி கிடைக்க இச்சட்டம் வழி வகை செய்யும். கருத்து கணிப்புகள், பா.ஜ.,கட்சியின் ஓட்டு சதவீதம் உயர்ந்து வருவதை காட்டுகிறது. தமிழகத்திலும், அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு பா.ஜ., வளர்ந்து விட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ